Thursday 3 January 2013

குழந்தைகளுக்கு இலக்கிய ருசியை ஏற்படுத்த வேண்டும்!

குழந்தை இலக்கியம் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. இளமையிலிருந்தே குழந்தைகளுக்கு இலக்கிய ரசனை கொடுக்கப்பட வேண்டும். பிறகு இளைஞர்களைப் பற்றிப் பிடிப்பது கடினம். ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் இதில் முக்கியப் பொறுப்பு இருக்கிறது. சம்பளம் சார்ந்த கல்விமுறை இதை மழுங்கடித்துவிட்டது.
குழந்தை இலக்கியமே குழந்தைகளுக்கு சமூக உணர்வு, சிந்தனை, ஒழுக்கம் ஏற்பட வழி வகுக்கும். இதை பெற்றோர் - ஆசிரியர் - சமூகம் உணர வேண்டும்.
ஒரு காலத்தில் வகுப்பறையில் குழந்தைகளுக்கு குழந்தை நூல்களைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார்கள்.
அக்கதை நூலை மாணவர்கள் நாடகம் போல் மாறி மாறி வாசித்து மகிழ்வார்கள். இவ்வாறு இலக்கியம் மீது மாணவர்களுக்கு ருசி ஏற்படும். பாடல்கள் கேட்டு மகிழ  இசை வகுப்புகள் இருந்தன. பள்ளியில் இத்தகைய அனுபவங்களைக் கொடுக்கும்போது மாணவர்கள் வீடுகளில் இதைப் பின்பற்றுவார்கள்.
பாடம் என்பது அறிவு சார்ந்தது. உணர்வுகள் கலை, இலக்கியங்கள் சார்ந்தது. அவை இரண்டுக்கும் சமநிலை வேண்டும். இந்தச் சமநிலையைக் குழந்தைகளிடம் உருவாக்க இலக்கியக் கல்வி பயிற்சி வேண்டும்.

பொன்னீலன்

1 comment: