Thursday, 22 November 2012

குழந்தை எழுத்தாளர் நண்பர்களே...!


இப்போது காலம் மாறிவிட்டது.

குட்டிப் பிள்ளைகள் கையில் கம்ப்யூட்டரும், ரிமோட்டும் வந்துவிட்டது.

பெரியவர்களை விடக் குழந்தைகள் ரொம்ப... ரொம்ப... அட்வான்சாக

இருக்கிறார்கள்.

பெற்றோர் தமக்குத் தெரியாதவற்றைப் பிள்ளைகளிடம் கேட்டுத் தெரிந்து
கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் குழந்தை எழுத்தாளர்கள் இனிமேலும் ஓலைச்

சுவடிகளில் எழுதிக் கொண்டிருக்க முடியாது.

பாடப் புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்களைக் கையில் தொடவும்

தயங்கும் இக்காலத்தில், புத்தகம் போட்டு அவற்றைக் குழந்தைகளின்

கையில் சேர்ப்பது கடினம். அந்தக் கடினமான வேலையைத்தான்

இவ்வளவுநாட்களும் குழந்தை எழத்தாளர்களாகிய நாம் செய்து வந்தோம்
.
காலத்துக்கு ஏற்றவாறு நாமும் மாற வேண்டியிருக்கிறது. அந்தத் தேவையை

 உணர்ந்ததன் விளைவே இந்த குழந்தை எழுத்தாளர் பிளாக் ஸ்பாட்.

நண்பர்களே... உங்கள் படைப்புகளை  sugumaranjeyaseelan@gmail.com   என்ற

 முகவரிக்கு உங்கள் புகைப்படத்துடன் அனுப்பி வையுங்கள். "குழந்தை

 எழுத்தாளர்' பிளாக் ஸ்பாட்டில் வெளியிடுகிறோம்.

இது உங்களுக்கான மேடை
.
உங்களுக்கான களம்.

விரைந்து செயல்படுங்கள். படைப்புகளை அனுப்பி வையுங்கள்.

படைப்புகளை கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்.

உங்கள்,

செ.சுகுமாரன்

1 comment:

  1. இது ஒரு நல்ல முயற்சி. பரவலாக்குவோம். குழந்தைகளுக்கும் அறிமுகம் செய்வோம்.
    நல்வாழ்த்துகள்.
    கிருங்கை சேதுபதி
    sethukapilan@gmail.com
    9443190440

    ReplyDelete